நாகை அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு ஆடல்,பாடல் மற்றும் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலமாக கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த கச்சநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழதெரு பகுதியில், இல்லம் தேடி கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைக்குழு மூலமாக மாணவர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டு, குத்து விளக்கு ஏற்றி நிகழ்வு துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடல், பாடல் மற்றும் நாடகம் உள்ளிட்டவற்றின் வாயிலாக, கல்வி கற்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இல்லம் தேடி கல்வியில் பயில உள்ள மாணவர்களுக்கு, பாடம் கற்பிக்க உள்ள தன்னார்வர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.