நாகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி வலியுறுத்தி மாரத்தான் போட்டி

நாகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.;

Update: 2021-10-10 05:01 GMT

நாகையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி எல்லோரா கல்விநிறுவனங்கள் மற்றும் புனித அடைக்கல அன்னை பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி புனித பாத்திமா மாதா ஆலயத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை நடைபெற்ற இந்த  மாரத்தான் போட்டியை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள்

இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி பதாகை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். இறுதியில் முதல் மூன்று இடத்தை பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



Tags:    

Similar News