நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது, இலைகள், பூக்கள் கருகி நாசம்

நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது இலைகள், பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

Update: 2021-04-26 02:33 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீசிய கஜா புயலினால் பல்லாயிரக்கணக்கான பலன் தரும் முந்திரி மரங்கள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலில் இருந்து எஞ்சிய மரங்கள் தற்பொழுது காய்க்கத் துவங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முந்திரி மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த முந்திரி மரங்களில் மர்ம நோய் தாக்கி முந்திரி மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் கருகி உதிர்ந்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த மர்ம நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையையும் விடுத்தனர்,

Tags:    

Similar News