கீழ்வேளூர் மக்கள் நீதி மையம் வேட்பாளர் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சித்து, திருப்பூண்டி பகுதியில் வீதி, வீதியாக டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய கட்சியின் வேட்பாளராக டாக்டர் சித்து போட்டியிடுகிறார். அவர் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கிராமத்தில் தவீர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இதனையொட்டி கடைத்தெரு, பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், மீனவர்கள் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது உடன் வந்த மக்கள் நீதி மைய தொண்டர்கள் டார்ச் லைட் சின்னம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி வாக்கு சேகரித்தனர்.