நாகை: மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு
ஜாவத் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நாகை துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் மழை ஓய்ந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் அந்தமான் வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள ஜாவத் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட மீன்வளத்துறை உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக நாகை, நாகூர், செறுதூர், கள்ளார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு துறைமுகங்களில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது.