கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Update: 2021-12-29 00:15 GMT

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். 

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் கூறி, காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிக் கொண்டனர்.

பின்னர உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர். சகல சௌபாக்கியம் வேண்டி,  கோவில் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி சுவாமிக்கு வழிபாடு செய்தது, அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News