வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
வேளாங்கண்ணியில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வேளாங்கண்ணியில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை பங்கேற்பு.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உதவிக்கரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அன்புதான் கடவுள் தன்னார்வலர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா முக கவசம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரளான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.