நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயதான மூதாட்டி
கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.;
நாகை அருகே 90 வயதான மூதாட்டி சக்கர நாற்காலியில் வந்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.
நாகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.
கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி நாகரெத்தினம், கீழ்வேளூர் அஞ்சுவடடத்தம்மன் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலியில் வந்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.