ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு
நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் ஸ்பீட் என்ஜின் பயன்பாடு குறித்து ஆலோசனை.;
அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜின் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று நடைபெற்றது.
இகூட்டத்தில், மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும், அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜினை பயன்படுத்தும் மீனவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜின் பயன்பாட்டை தடுத்து நிறுத்தி, வருகின்ற 24 ஆம் தேதிக்குள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள மூன்று மாவட்ட மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், வருகின்ற 27 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறும் என எச்சரித்தனர்.