நாகையில் 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
நாகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
நாகை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த எரவாஞ்சேரி வாய்க்கான்கரை தெருவைச் சேர்ந்தவர் மாதவன்(40). இவர் அங்கு விளையாடிய 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர்களிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.