காவிரி சரபங்கா திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மேலப்பிடாகையில் காவிரி சரபங்கா திட்டத்தை கண்டித்து விவசாயி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தின் மூலம் டெல்டா விவசாயம் முற்றிலுமாக பாதிக்கும். ஏற்கனவே 120 அடிக்கு மேல் வரும் உபரி நீரை தான் மோட்டார் மூலம் ஏற்றுவோம் என முதல்வர் அறிவித்து விட்டு, தற்போது அணையில் நீர் குறைவாக இருக்கும்போது, எடப்பாடி தொகுதிக்குட்பட்ட 100 ஏரிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் செயலை தொடங்கி வைத்துள்ளார். எனவே காவிரி சர பங்கா நீரேற்றுத் திட்டத்தை கண்டித்து கீழையூர் அருகே மேலப்பிடாகை கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாவட்டகுழு உருப்பினர் பால்சாமி, சிஐயுடி மாவட்ட செயலாளர் தங்கமணி, ஒன்றிய குழு உருப்பினர் ரவி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.