வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே துணியை காயவைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-11-22 05:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பணப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோமதி 32, தனியார் நிறுவன ஊழியர்.

இவர் துணிகளை துவைத்து விட்டு வீட்டின் அருகில் உள்ள கம்பியில் காயவைக்க சென்றுள்ளர். அப்போது அந்த வீட்டின் அருகில் இருந்த கம்பியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அக்கபக்கத்தின் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வேப்பணப்பள்ளி போலீசார் சம்பவயிடத்தில் விசாரனை மேற்கொண்டு கோமதியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்தள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணியை காயவைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News