உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம்தினம் சாகச பயணம் செய்யும் மாணவ மாணவிகள்

உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம்தினம் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள்

Update: 2021-11-17 11:56 GMT

இளம் கன்று பயம் அறியாது.. ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் சிறுவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்தப் பள்ளி சென்னை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது. தினம் தினம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் இந்த சாலையை கடந்து தான் பள்ளிக்குச் சென்று வர வேண்டும்.

சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் கனரக வாகனங்களும் கார்களும் அதிவேகமாக வந்து செல்லும். இந்த வாகனங்களுக்கு மத்தியில் பள்ளி தினமும் மாணவ-மாணவிகள் உயிரை பொருட்படுத்தாமல் அலட்சியமாக சாலையை கடந்து வருகின்றனர். மாணவ மாணவிகள் கடந்து செல்லும் போது எந்த ஒரு வாகனமும் வேகத்தை குறைப்பது இல்லை. மேலும் சாலை கடக்க இந்த பகுதியில் எந்த சாலை  குறியிடும் இல்லை. மேலும் மாணவ மாணவிகள் கடப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களும் இருப்பதில்லை. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சாலையை உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையில் ஓடி வந்து கடக்கும் காட்சி பதபதவைக்கும்.  அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களையும் தினம் தினம் அதிர்ச்சியளிக்க வைக்கிறது. மேலும் பள்ளி மாணவ மாணவிகள் சாலையோரங்களில் கும்பல் கும்பலாக விளையாடி கொண்டும் சாலையில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு செல்வதால் இப்பகுதி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோதி பெரும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளின் கைகளை பிடித்து கொண்டு சாலையை ஓடி சென்று கடக்கின்றனர்.  அடிகடி இந்த பகுதியில் பெரும் விபத்துகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவ மாணவிகளின் இந்த தினம் தினம் ஆபத்தான பயணத்தை கருத்தில் கொண்டு ஒரு தரை மேம்பாலம் அல்லது ஒரு புதிய மேம்பாலம் அரசு அமைத்து தர பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News