கர்நாடகாவில் சந்தன மரம் கடத்தல், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

கர்நாடகாவில் சந்தன மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கர்நாடகா போலீஸ் தேடுது.;

Update: 2021-09-09 13:45 GMT

கர்நாடகாவில் சந்த மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட3 பேரை வேப்பனப்பள்ளிக்கு  அழைந்து வந்த கர்நாடக போலீசார் இருளர் காலானியில் சென்று விசாரனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் கம்பள புரா -ஹரகலதேவி வனப்பகுதியில் மிகப்பெரிய சந்தனமரங்கள் உள்ளது. சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய மலைகள் சிறு குன்றுகள், கொண்ட வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பத அறிந்த சந்தனமர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரை பிடித்தனர் மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி(28) மல்லப்பா(58) கிருஷ்ணா(28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இவர்கள் அனைவரும் சுமார் 12 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஆக மலைப்பகுதியில் வந்து தங்கி இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் மரங்களை வெட்டி கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்தியது தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக மூவர் தற்போது சிகிச்சையில் உள்ளதால் அவர்களின் சிகிச்சை முடிந்த பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளபடும் என தும்கூர் மாவட்ட வனத்துறை அதிகாரி ரமேஷ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல்நாத்தம் இருளர் கலாணியை சேர்ந்த 5 பேரையும் அடையாளம் கண்ட கர்நாடக போலிசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கடத்தில் ஈடுப்பட்டுள்ள 15 பேர் கொண்ட கும்பலில் பர்கூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடத்திலில் ஈடுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் வேப்பனப்பள்ளிக்கு கைதிகளை அழைந்து வந்த கர்நாடக போலீசார் இருளர் காலானியில் சென்று விசாரனை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தனக்கட்டை கடத்தல் தொடர்பாக கர்நாடக போலீசார் விசாரணை நடத்தியது வேப்பனபள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News