சூளகிரி: சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பு லாரி ஏறி உயிரிழப்பு

சூளகிரி அருகே, சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பு, லாரி ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது.;

Update: 2021-07-14 02:15 GMT

லாரி ஏறியதில் உயிரிழந்த மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  கிருஷ்ணகிரி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை,  அஞ்செட்டி,  தளி கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளைக் கொண்டது. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை , கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது.

இதேபோல் இங்குள்ள வனப்பகுதிகளில் மலைப்பாம்பும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன. மலைப்பாம்புகள் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி ஊருக்குள் புகுவதும் அதேபோல் விளைநிலங்களுக்கு படையெடுப்பதுமாக உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பிளாளம் பேருந்து நிலையம் என்ற இடத்தில்,  12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மலைப் பாம்பின் மீது ஏறியது. இதில், மலைப்பாம்பு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News