பள்ளி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;

Update: 2021-12-22 12:16 GMT

வேப்பனஹள்ளியில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய நுகர்வோர் தின விழாவினையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு தின விழா பல்வேறு இடங்களில் நடை பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற  இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர்சத்தி மனோகரன், நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஜாய், நுகர்வோர்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகள், சாலை பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்டம், கொரோனா நோய் தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்தும் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேடுகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News