மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

சூளகிரியில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஏதுவாக, எம்எல்ஏ முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-11-11 10:30 GMT

ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னார் அணைக்கு,  நீர் கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று,  ஓசூர் கெலவரப்பள்ளியில் திறத்தவிடப்பட்ட உபரிநீரை,  மருதாண்டப்பள்ளி கால்வாய் வழியாக சூளகிரி துரை ஏரி , சூளகிரி சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர, தற்போது நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது.

இதனிடையே,  மருதாண்டப்பள்ளி கால்வாய் தற்போது துர்வாரப்பட்டு வந்த நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .விரைவில் சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர அதிகாரிகளை, அவர் வலியுறுத்தினார் .

இந்நிகழ்ச்சியில்,  சூளகிரி அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மன்ற தலைவர் சிவராஜ் மற்றும் சூளகிரி விவசாய சங்கத்தினர் மற்றும் சின்னார் ராமசாமி, ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News