பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்காரிமேடு பகுதியில், நரிகுறவர் இன மக்களிடம், அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேடு என்ற இடத்தில், அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார், நரிக்குறவ மக்களிடம் இன்று குறைகளைக் கேட்டார். அப்போது அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக இங்குள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சாலையை அளந்து கொடுக்க வேண்டும். இங்கு சாக்கடைக் கால்வாய் வசதி இல்லை. புதிய சாக்கடைக் கால்வாயை கட்டித்தர வேண்டும் என்றனர்.
அத்துடன், பொது கழிப்பிடம் இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொது கழிப்பிட வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனர். இது குறித்து பரீசிலித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக, அவர்களிடம் எம்.எல்.ஏ வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் சைலேஷ்கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் திம்மராஜ், ஜெல்கேசன், முருகன், ராஜி, சின்னஅனுமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.