சூளகிரி அருகே லாரி கண்ணாடி உடைப்பு: ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கைது

சூளகிரி அருகே லாரி முன்பக்க கண்ணாடியை உடைத்த ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-12 17:12 GMT
பைல் படம்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் லாரி ஓட்டுநர். இவர் கண்டெய்னர் லாரி மூலம் சரக்கு ஏற்றுவதற்காக ஓசூரில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் சூளகிரி அருகே அழகு பாவி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஆம்னி பேருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வாகனம் முந்திச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் சுவராஜ் என்ற நிறுவனத்தின் ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துனர் லாரியை வழிமறித்து ஓட்டுநர் சண்முகத்தை தாக்கி, தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். பின்னர் லாரியின் முன்பக்கம் மற்றும் வலதுபுறம் உள்ள கண்ணாடிகளை கல்லால் தாக்கி உடைத்துவிட்டு அங்கிருந்து பேருந்தை பெங்களூர் நோக்கி எடுத்துசென்று விட்டார்.

இது குறித்து சூளகிரி  போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நடத்துனர் சிக்கே கவுட மற்றும் பிரசாந்த் குமார் ஆகிய இருவரை  போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News