குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விபத்து; சாலையில் சென்ற தொழிலாளி பலி
குருபரப்பள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயப்பா கூலித் தொழிலாளி. இவர் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆஞ்சநேயப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஞ்சநேயப்பா நேற்று இறந்தார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.