வீடு, வீடாக சென்று குறைகளை கேட்டறிந்த கே.பி.முனுசாமி; கிராம மக்கள் நெகிழ்ச்சி

சொக்காபுரம் கிராமத்தில் கே.பி.முனுசாமி வீடு, வீடாக சென்று மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2021-09-02 12:15 GMT

கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ., கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வேட்பாளர் முருகனை விட அதிக வாக்குகள் பெற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, வேப்பனப்பள்ளி தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தும் மனுக்களை பெற்றும் கே.பி.முனுசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட சொக்காபுரம் கிராமத்தில் நேரடியாக சென்ற எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி கிராம மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். வீடு வீடாக சென்று அமர்ந்து குறைகளை கேட்டறிந்ததால் கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News