சூளகிரி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்து: ஒருவர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் காலை வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு உடன் குளிரும் காணப்பட்டது.

Update: 2021-12-27 04:14 GMT

காமன்தொட்டி பகுதியில் சொகுசு கார் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் காலை வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு உடன் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

சூளகிரி பகுதிகளில்  காலை வழக்கத்திற்கு மாறாக கடுமையான பணிவுடன் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றது. இருந்தபோதிலும் காமன்தொட்டி என்ற பகுதியில் முன்பு சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News