ஓட்டல் முன்பு நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது: குழந்தையுடன் பெண் உயிர் தப்பினார்

கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் முன்பு நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், காரில் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;

Update: 2021-07-12 04:00 GMT

கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் முன்பு நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், காரில் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வேலூரில் இருந்து பெங்களூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை வேலூரை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்துள்ளார். காரில் வேலூர் தென்னை மரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்த சூரத், அவரது மனைவி சுப்ரியா, 4 வயது பெண் குழந்தை ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு, சூரத் மற்றும் முரளிகிருஷ்ணா ஆகிய 2 பேர் மட்டும் சாப்பிட சென்றுள்ளனர். காரில் சுப்ரியா, 4 வயது பெண் குழந்தை மட்டும் அமர்ந்திருந்துள்ளனர்.

அப்போது காரில் இருந்து திடீரென்று புகை வந்ததுள்ளது. இதை பார்த்த சுப்ரியா குழந்தையுடன் வெளியே வந்துள்ளார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து, எரிய தொடங்கியுள்ளது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, ஓட்டலில் இருந்த தண்ணீரை கொண்டு காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரின் உள்ளே இருந்த உடமைகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News