இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
வேப்பனஹள்ளி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி புஷ்பா. தையல் பணி செய்து வந்தார். இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அதே போல் கடந்த 13ம் தேதி மாலை மீண்டும் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புஷ்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேப்பனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.