பைக்கில் வந்தவர்களை தாக்கிய குடிபோதை ஆசாமி கைது

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை குடிபோதையில் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2021-05-13 04:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.  இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் இவரது நண்பர் ராஜகோபால் என்பவருடன் நேற்று இரவு குந்தாரப்பள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் அங்கு வந்த சின்னசூலாமலை பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர், ராஜ்குமார் மற்றும் ராஜகோபாலிடம் ஆபாசமாக பேசி அருகிலிருந்த பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News