வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன் வீடு, வீடாக பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ., வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

Update: 2021-03-18 07:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ., சூளகுண்டா, கொப்பக்கரை, சஜ்ஜல்பட்டி, பிள்ளையார் அக்ரஹாரம், கருக்கனஹள்ளி, தொட்டமெட்டரை, ஊடேதுர்க்கம், நாகமங்கலம், உள்ளுகுறுக்கை, தொட்டதிம்மனஹள்ளி, ராயக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 10 ஆண்டு காலம் இருளில் மூழ்கியுள்ள நாம் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறு வாக்குகளிப்பதன் மூலம் ஏழை, எளியோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற உடன் நமக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தயாராக உள்ளார். குறிப்பாக பெண்கள் இலவசமாக டவுன் பஸ்களில் பயணம் செய்யலாம். குடும்ப தலைவிகளாக உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம், இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளார். இதை மனதில் வைத்து, உங்கள் தொகுதியை சேர்ந்த நான் தற்போது வேட்பாளராக போட்டியிடுவதை மனதில் வைத்தும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிப்பெற செய்வதன் மூலம் அனைத்து அரசு திட்டங்களும் உங்கள் ஒவ்வொருவரையும் வந்து சேரும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.



Tags:    

Similar News