தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்
ஆபத்தான முறையில் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி சென்று கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் குட்டப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளும், 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வேப்பனப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த கிராமத்திற்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைமேம்பாலம் சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தினம் தினம் ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி பாய்ந்தோடும் நீரில் ஆபத்தான முறையில் கரையை கடந்து சென்று வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் முதல் தினம் தினம் கூலி வேலைக்கு செல்லும் ஆட்களும் கல்லூரி மாணவர்களும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் முதல் இவற்றில் கடந்து செல்வதால் மிகுந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கர்பணி பெணகளுக்கு ஆம்பிலன்ஸ் கூட வர முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தண்ணீரின் அளவு அடிக்கடி அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் கரையை கடக்க முடியாமல் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது கயிரை கட்டி கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகள், நோயாளிகள், கடந்து சென்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் இதுபோன்று மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது கிராம மக்கள் கரையை கடக்க முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் முதல் நோயளிகள், தின கூலி செல்லுபவர்கள், வாகன ஓட்டிகள் கிராம மக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராமத்தில் இருந்து வேப்பனப்பள்ளி பிராதான சாலைக்கு ஒரு கி.மீ தொலைவு உள்ளதால், இது வரை இந்த கிராமத்திற்க்கு சாலை வசதிகள் அமைக்கப்படவில்லை.
எனவே இந்த கிராமத்திக்கு சாலை வசதி மற்றும் ஒரு தரை மேம்பாலம் அமைக்க கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களும் குறைகளையும் கூறியும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் தற்போது இங்கு கிராமத்தின் மீது கவனம் செலுத்தி கிராம மக்களின் பலநாள் கோரிக்கை மற்றும் கனவை தரை மேம்பாலம் மற்றும் சாலை வசதி அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.