சூளகிரியில் பயிரிடப்பட்ட முட்டை கோஸ் வெள்ளத்தில் மூழ்கி சேதம்

சூளகிரி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் பயிரடப்பட்ட மூன்று ஏக்கர் முட்டை கோஸ் வெள்ள பெருக்கில் மூழ்கின.;

Update: 2021-11-19 11:01 GMT

வெள்ளித்தில் மூழ்கி சேதமான முட்டை கோஸ் பயிர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த போகிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமப்பா என்பவர், சூளகிரி சின்னார் அணை ஓரமாக சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் பயிரிட்டிருந்தார்.

சூளகிரி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் ஆற்றின் வழியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .

இந்நிலையில் திடீரென வந்த வெள்ள பெருக்கினால் பயிரிடப்பட்ட முட்டை கோஸ்கள் அனைத்தும் முட்டியளவில் உள்ள தண்ணீரில் மூழ்கின.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த முட்டைகோஸ்கள் தற்போது அணை வெள்ளத்தில் மூழ்கியதால், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசு நடவடிக்கை மேற்க் கொண்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி தெரிவித்தார்.

Tags:    

Similar News