கேட்டதோ சிக்கன் பிரியாணி; வந்ததோ புழு பிரியாணி
கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி சப்ளை
கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரபலமான ஓட்டலில் தினந்தோறும் பல்வேறு தரப்பு மக்கள் என 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்வர்.
பிசியான இந்த பிரியாணி ஓட்டலில், காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி,அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் 4 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபொழுது, கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர்..
கோபமடைந்த இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஓட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க எதிர்திசையில் பேசிய மேனேஜர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா? சாப்பிட்டு போகுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஓட்டலில் சாப்பிட்டவர்கள் தெரிவிக்கையில், பிரபலமான ஓட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுபோன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்