கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல்

சூளகிரி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-09-25 14:15 GMT

ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., தென்னரசு மற்றும் போலீசார், இன்று சூளகிரி காமன்தொட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பேரிகை கூட்ரோடு அருகே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 240 மூட்டைகளில் சுமார், 12 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.

இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து லாரி டிரைவர் விஜயகுமாரை கைது செய்து, அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி உரிமையாளரான வேப்பனஹள்ளி சுரேஷ், மற்றும் ரேஷன் அரிசி வாங்க இருந்த கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த பாக்யலட்சுமி மில் உரிமையாளர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News