போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
போச்சம்பள்ளி அருகே, மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேல்மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அந்த பஞ்சாயத்தில் தற்காலிக மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை, போச்சம்பள்ளி அடுத்த அப்புகொட்டாய் என்ற பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் விளக்கு எரியாததால் அதனை சரி செய்யும் பணியில் சுரேஷ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அருகே புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரத்தை ஆன் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லிங்கம்மாள் கொடுத்த புகாரின் பெயரில் போச்சம்பள்ளி எஸ்.ஐ மகேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.