அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர் அகற்றம்
ஊத்தங்கரை அருகே, கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் முட்புதர்களை, அறம் விதை அறக்கட்டளையினர் ஒன்று சேர்ந்து அகற்றினர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ளது கெரிகேப்பள்ளி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அண்மையில் பெய்த கனமழையால், அதிக அளவில் செடி, கொடிகள் வளர்ந்து, முட்புதர்கள் புதர் மண்டி கிடக்கின்றன.
இந்நிலையில், அறம் விதை அறக்கட்டளை சார்பில், பள்ளியின் தலைமையாசிரியர் ராதிகாவிடம் முட்புதர்களை அகற்ற அனுமதி கேட்டு, அதன் பேரில் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அறம் விதை அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர், அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று அங்கிருந்த முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்.