ஊத்தங்கரை பகுதிகளில் வேகமாக பரவும் கோமாரி நோய்: ஏராளமான மாடுகள் சாவு

ஊத்தங்கரை ஒன்றியத்தில் வேகமாக பரவும் கோமாரி நோயால் ஏராளமான மாடுகள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-02 08:01 GMT
பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் பலியாகியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பலியாகியுள்ளது விவசாயிகள் வேதனை அடையச் செய்துள்ளது. வீராட்சி குப்பம். ஊராட்சிக்குட்பட்ட ஓபுளிநாயக்கன்பட்டி,  தாதி நாயக்கன்பட்டி, கருவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்கள்.

அடை மழையின் காரணமாக தற்பொழுது இந்தப் பகுதியில் பசு மாடுகளை கோமாரி நோய் அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பசுமாடுகள் கால்களில் புண்கள் ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால் பால் அளவு குறைந்துள்ளது.

இதேபோல் மடிநோயால் அவதிப்படும் பசுமாடுகள் பால் சுரக்க முடியாத நிலை உள்ளது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி , மூங்கிலேரி, சத்திரப்பட்டி என பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏராளமான பசுமாடுகள் இறந்துள்ளது.

எனவே ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News