ஜிட்டோபனப்பள்ளியில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் : செல்லக்குமார் எம்பி வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிட்டோபனப்பள்ளியில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செல்லக்குமார் எம்பி., வழங்கினார்.;

Update: 2021-07-19 00:00 GMT

ஜிட்டோபனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்பி செல்லக்குமார் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த ஜிட்டோபனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் உமர்பாஷா தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் 105 வயதான முனியம்மாள் என்ற மூதாட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவியும், கணவரை இழந்த பெண்ணுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியும், நான்கு ஜோடிகளுக்கு திருமண நிதியுதவியாக 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், 2000 பேருக்கு இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், வக்கீல் அசோகன், நாஞ்சில் ஜேசுதுரை, வட்டாரத் தலைவர்கள் ஜேக்கப், லலித்ஆண்டனி, நஞ்சுண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News