ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் கூலித் தொழிலாளியிடம் பிக்பாக்கெட்; 3 பேர் கைது

ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியிடம் பிக்பாக்கெட் அடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 15:45 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டியம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை 10:30 மணிக்கு, ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டிலிருந்து தனது ஊருக்கு செல்ல நின்றுள்ளார்.

அப்போது, அருகே வந்த மூன்று பேர் கும்பல், ராஜன் பையில் இருந்த 500 ரூபாயை பிக்பாக்கெட் செய்து தப்ப முயன்றனர். ஆனால், அருகிலிருந்தவர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், பிக்பாக்கெட்டில் ஈடுபட்டவர்கள் ஊத்தங்கரை அடுத்த ஆலமரத்தூர் குமார், லக்கம்பட்டி சுரேஷ், நாய்க்கன்பட்டி வேடியப்பன் என்பது தெரியவந்தது. 

இது குறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் எஸ்.ஐ.ஜகனாதன் இன்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News