பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு; பெண் தூக்கிட்டு தற்கொலை
ஊத்தங்கரை அருகே பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு இவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் மாலை ஊத்தங்கரை அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ சுப்பிரமணி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.