இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து ஒருவர் படுகாயம்
கல்லாவி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.;
கல்லாவி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் அனுமன்தீர்த்தம் பகுதியில் இருந்து புங்கனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புங்கனை ஓம்சக்தி கோவில் அருகே எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. இதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்து குறித்து கல்லாவி போலீஸ் எஸ்ஐ பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.