ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் சாவு

ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-11-15 13:51 GMT

 கெரிகப்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய சிசிடிவி காட்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே கெரிகப்பள்ளி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் நிலைதடுமாறி எதிரே கிருஷ்ணகிரி நோக்கி வந்த அரசு பஸ்சில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் கல்லாவி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் வயது 65 த/பெ.கிட்டப்பநாயுடு என்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற விபத்து இந்த பகுதிகளில் தொடர்கதையாக உள்ளது. இந்த வீரியம்பட்டி கூட்ரோட்டில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூழலில் விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News