அரசு மருத்துவரை ஆபாசமாக பேசியவர் கைது
பாரூர் அருகே அரசு மருத்துவரை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் கடந்த 23ஆம் தேதி மதியம் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தபோது அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவர் அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார் இதுகுறித்து போலீசில் டாக்டர் முருகன் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்று வழக்குப்பதிவு செய்த பாரூர் போலீஸ் எஸ்.ஐ.பாண்டியன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.