கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்றவர் கைது: பணம் பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்றவரை கைது செய்த போலீசார், 20 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் எஸ்ஐ சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், பெருகோபணபள்ளி கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு இருந்ததை கண்டனர். இதுபற்றி விசாரணை நடத்தி, லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த எம்.ஜி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரை கைது செய்தனர்.
அந்த நபரிடம் இருந்து 20 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 440 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.