குழந்தையுடன் இளம்பெண்ணை காணவில்லை: கணவர் புகார்

சாமல்பட்டி அருகே ஒரு வயது குழந்தையுடன் இளம்பெண் காணமல் போனதை குறித்து, அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2021-03-19 07:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கூர்சாம்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவியரசி என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு ஒரு வயது குழந்தையுடன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கணவர் சென்னையன் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அடையாளம் தெரியாத ஒருவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாமல்பட்டி போலீஸ் எஸ்ஐ மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News