குடும்ப பிரச்னை: கணவர் விஷம் குடித்து தற்கொலை

மத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-03-20 03:08 GMT

மத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த புலிகுண்டா பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News