ஊத்தங்கரை அருகே இருளில் தரைப்பாலம்- அவதிப்படும் வாகன ஓட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கெரிகேப்பள்ளி ரயில்வே தரைபாலம் மின் விளக்கு இல்லாமல் இருள் நிறைந்துள்ளது. இதில் வாகனஓட்டிகள் பயணம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெரிகேப்பள்ளி பகுதியில் ரயில்வே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த தரை பாலத்தின் கீழே செல்லும் சாலை திருவண்ணாமலையிலிருந்து தர்மபுரிக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் அந்த சாலையில் தான் பயணிக்கின்றன
மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலையை கடக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
கடந்த புத்தாண்டு தினத்தன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது இந்தப் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இரவுப் பணியை முடித்து தொழிற்பேட்டையில் இருந்து வீடு செல்லும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் பயந்து சாலையை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது
எரியாத மின் விளக்குகளில் காவல் துறையின் சார்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு இருப்பது பார்ப்போரை நகைப்பூட்டுகிறது. எனவே மின்விளக்குகளை சரி செய்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.