மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கல்லாவி அருகே மது குடிப்பதை தட்டி கேட்டதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-09-17 15:45 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த மேல் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இவர் மது குடிப்பதை அவரது குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை மேல் வெள்ளாளப்பட்டி பகுதியிலுள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News