திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் தற்கொலை முயற்சி, பெண்ணின் குடும்பம் கிணற்றில் குதித்த சோகம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த பெண்ணின் குடும்பமே கிணற்றில் குதித்தது. இதில் இரண்டு பேர் இறந்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மத்தூர் அருகே அமைந்துள்ள களர்பதி ஊராட்சிக்கு உட்பட்ட மிண்டிகிரி கிராமத்தில் மகாலிங்கம் மற்றும் அம்சவேணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதில் மூத்த மகள் வயது 19,இளைய மகள் வயது 15, மகன் 13 வயது. இந்த நிலையில் மூத்த மகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் வருகிற 20-ஆம் தேதி திருமணம் செய்வதாக கூறி பத்திரிக்கை அடித்து வீடு வீடாக சென்று பத்திரிக்கை வைத்து வந்த நிலையில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்ற வாலிபருடன் 19 வயது பெண் பழகி வந்ததுள்ளது தெரியவந்துள்ளது.
திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டிருப்பதால் காதலன் திருப்பதி மற்றும் காதலி இருவரும் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
காதலன் திருப்பதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையிலும் காதலி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்/
இதில் காதலியின் தந்தையான மகாலிங்கம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் தனது மகள் காதலனுடன் சேர்ந்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட விஷயம் தெரியவந்தால் கணவன் மகாலிங்கம் கோபத்தில் ஏதாவது செய்யக்கூடும் என்று பயந்தார் அம்சவேணி.
அம்சவேணி மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் அம்சவேணிக்கு நீச்சல் தெரியும் என்ற காரணத்தினால் அம்சவேணி கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். அவரது மகன் 13வயது கிணற்றில் குதிக்கும் போது தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்துள்ளார் .
இளைய மகள் கிணற்றில் குதிக்கும் போது தவறி கம்பியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி வந்த நிலையில் தகவல் தெரிந்து ஊர்மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
அதனடிப்படையில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் அம்சவேணி மற்றும் சிறுவனை சடலமாக மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 15 வயது சிறுமி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்