மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்து கர்ப்பம்: மர்ம ஆசாமிக்கு வலை

ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த நபரை, போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2021-07-16 12:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் வழக்கமாக ஆடுகளை மேய்க்க செல்வது வழக்கம்.

கடந்த 5 மாதத்திற்கு முன்பு இவர் ஆடுகளை மேய்க்க சென்ற போது மர்மநபர்,  இவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். இதில், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, அந்த பெண்ணின் பெற்றோர்  போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News