பழுதடைந்த சாலையை சரிசெய்ய மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் பழுதடைந்த சாலையை சரிசெய்ய கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாகக் கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இறந்துபோன சாலையாகக் கருதி சாலைக்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் இந்த சாலையில் சுமார் 700க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சாலையில் சென்று வந்ததாகவும் இதுவரையில் யாரும் சாலைப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறியும் சாலைக்கு மலர் வளையம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.