சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைத்த வழக்கில், இதுவரை 11 பேர் கைது

சாமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டரை கொன்று புதைத்த வழக்கில், இதுவரை 11 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-30 16:15 GMT

கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட சென்னை ஆடிட்டர் ( பைல் படம்)

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். தன்னுடன் பணிபுரியும் இருவருடன் கடந்த, 27ம் தேதி கிருஷ்ணகிரி வந்தவர், மாயமானார். அவரது மனைவி பூர்ணிமா பிரதான் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்தனர்.

அதில் கொடுக்கல் வாங்கல் தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டதும், கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே கொல்லப்பட்டி மாந்தோப்பில் அவரது சடலத்தை புதைத்ததும் தெரிந்தது.

கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் சரவணன், தங்கவேல், கிருத்திகா, அலெக்சாண்டர் ஆகியோர் கொண்ட நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஜனரஞ்சன் பிரதானை அடித்து கொன்றதாக அவரது கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், சபரீஷ் அளித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை தாசில்தார் தெய்வநாயகி, போலீசார் முன்னிலையில் ஜனரஞ்சன் பிரதான் சடலம் நேற்று இரவு தோண்டி எடுக்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விசாரணையில் அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், உட்பட கிருஷ்ணகிரி அரசியல் புள்ளிகள், பெங்களூரை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இந்த கொலை தொடர்பாக சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார், சபரீஷ், திருமால் ,கோபி, சிவன், மணிவண்ணன் உட்பட ஆறு பேரை நேற்று பிடித்து விசாரித்த நிலையில் சாமல்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன்,வெற்றி, மத்தூர் திருப்பதி, பெங்களூர் கே.ஆர்புரம் பிரசாந்த், லோகா, ஆகியோரை இன்று பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் 11 பேர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News