போச்சம்பள்ளி அருகே பாதை தகராறில் லாரி டிரைவர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே பாதை தகராறில் லாரி டிரைவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
போச்சம்பள்ளி அருகே பாதை தகராறில் லாரி டிரைவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. லாரி டிரைவரான இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் பாதை சம்மந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி கோட்டூர் கிராமத்தில் இருந்த ராமு என்பவரை அங்கு சென்ற விஜயா, மைதிலி, ராமன் ஆகிய 3 பேரும் ஆபாசமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ராமு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து போச்சம்பள்ளி எஸ்ஐ வைத்தியலிங்கம் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.