ஓசூர்: குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் 6 சவரன் நகை வழிப்பறி

ஓசூர் அருகே, குழந்தையுடன் இருந்த பெண்ணிடம், 6 சவரன் நகையை வழிப்பறி செய்த பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்;

Update: 2021-07-13 11:00 GMT
ஓசூர்: குழந்தையுடன் சென்ற  பெண்ணிடம் 6 சவரன் நகை வழிப்பறி
  • whatsapp icon

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிலா. இவர், உறவினரின் மூன்று வயது குழந்தையுடன் மதியம்,  நேரு நகர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த,  20 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்து, நிலாவிடம் பேச்சுக் கொடுத்து அவரிடம் இருந்து ஆறு சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து நிலா, ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் எஸ்ஐ யுவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News